தொலைக்காட்சிகளில் மறுஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான தொடர்களான கோலங்கள், திருமதி செல்வம் போன்றவை தொலைக்காட்சிகளில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டபோது, அவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
ஆனால், தற்போதைய காலகட்டத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற தொடர்கள் குறுகிய கால இடைவெளியிலேயே மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
கலர்ஸ் தொலைக்காட்சியில் நாகினி, சக்தி திருவிளையாடல், தென்றல் வந்து என்னைத் தொடும், முத்தழகு ஆகிய தொடர்கள் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இதில், நாகினியும், சக்தி திருவிளையாடலும் வேறு மொழியில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மறுஒளிபரப்பாகிறது.
தென்றல் வந்து என்னைத் தொடும் தொடர், விஜய் தொலைக்காட்சியில் 2021 முதல் 2023 வரை ஒளிபரப்பானது.
இதேபோன்று, முத்தழகு தொடரும் விஜய் தொலைக்காட்சியில் 2021-ல் தொடங்கி 2022 வரை ஒளிபரப்பானது.
இந்த இரு தொடர்களுமே சமீபத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கலர்ஸ் தொலைக்காட்சியில் இவை இரண்டுமே மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், தென்றல் வந்து என்னைத் தொடும் தொடர், டிஆர்பி புள்ளிப் பட்டியலில் 0.23 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதேபோன்று முத்தழகு தொடர் 0.09 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. சக்தி திருவிளையாடல் என்ற ஆன்மிக தொடர் 0.43 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க | பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிக் கொண்டாட்டம்! ஒன்றுகூடிய நடிகர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.