ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!
ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் போஸ்டர் குறித்து...
இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் போஸ்டரை ஜேம்ஸ் கேமரூன் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல கோடி ரூபாயில் அவர் அமைத்த செட் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் முதல் போஸ்டரை நவம்பர் மாதம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தைப் பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன் அவர் இயக்கிய அவதார் - 3 படத்தின் புரமோஷனுக்காக இந்தியா வருகிறார். அப்போது, ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடுவார் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: தலைவன் தலைவி வசூல் எவ்வளவு? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
james cameroon will release ss rajamouli and mahesh babu movie poster
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.