FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எஸ்டிஆர் - 51 திரைப்படத்தில் சந்தானம்!

சிலம்பரசன் திரைப்படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளதாகத் தகவல்...

சிலம்பரசன், சந்தானம்
பகிர்:

நடிகர் சிலம்பரசனின் 51-வது திரைப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதையுடன் தொடர்புடைய கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது.

அடுத்ததாக, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு காட் ஆஃப் லவ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

இந்த நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ்டிஆர் - 49 திரைப்படத்திலேயே இருவரும் இணைந்து நடிக்க இருந்தனர். ஆனால், அப்படம் கைவிடப்பட்டதால் இப்படத்தில் இணைந்ததாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments