தலைவன் தலைவி போஸ்டர்.  படம்: சத்யஜோதி ஃபிலிம்ஸ்
செய்திகள்

தலைவன் தலைவி வசூல் எவ்வளவு? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தலைவன் தலைவி படத்தின் வசூல் ரூ. 100 கோடியைக் கடந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தலைவன் தலைவி படத்தின் வசூல் ரூ. 100 கோடியைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது.

தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதனிடையே, தலைவன் தலைவி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளைத் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக வெளியிட்டது.

இந்நிலையில், இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

thalaivam thalaivi film collection has crossed Rs. 100 crore, the film crew has officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT