பிரபு தேவா, வடிவேலு படத்தின் பூஜை!
பிரபு தேவா, வடிவேலு படம் குறித்து...
நடிகர்கள் பிரபு தேவா, வடிவேலு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
நடிகர் பிரபு தேவா இந்தியளவில் அறியப்படும் நடிகர், இயக்குநராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பகீரா கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
அதே நேரம், நடிகர் வடிவேலு மாமன்னன் வெற்றிக்குப் பின் கேங்கர்ஸ் படத்திலும் கவனம் ஈர்த்திருத்திருந்தார். ஃபஹத் ஃபாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்தும் வரவேற்பைப் பெற்றார்.
இந்த நிலையில், நடிகர்கள் வடிவேலு, பிரபு தேவா இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இப்படத்தை, சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் சோம்பி (zombie) கதையாக உருவாகவுள்ளது.
இதையும் படிக்க: கிங்டம் ஓடிடி தேதி!
actors prabhu deva, vadivelu's new movie pooja happening today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.