நடிகர் ரஜினிகாந்த் 
செய்திகள்

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் பாலிவுட் பாட்ஷா?

ஜெயிலர் - 2 படத்தில் பிரபல நடிகர்...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் பிரபல நடிகர் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்த நிலையில் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், மோகன்லால், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த்

இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவருக்கான படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூலியில் ஆமீர் கான் நடித்திருந்ததுபோல் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் ஷாருக்கான் இணையவுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

actor sharukhkhan will join jailer 2 update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

பேரவையில் முதல்வரின் 5 முக்கிய அறிவிப்புகள்!

சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! - பேரவையில் முதல்வர் Stalin அறிவிப்பு

பட்ஜெட் கூட்டத் தொடர்: ஜன. 27-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம்: மேயர் பிரியா விளக்கம்

SCROLL FOR NEXT