அனுபமாவின் லாக் டவுன் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.
இவர் நடிப்பில் வெளியான ‘கார்த்திகேயா - 2’ , ‘18 பேஜஸ்’ டில்லு ஸ்கொயர், டிராகன் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றன.
இறுதியாக, இயக்குநர் மாரி செல்வராஜின் பைசன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.
இதனிடையே, லைகா நிறுவனம் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படத்துக்கு ‘லாக் டவுன்’ பெயரிடப்பட்டிருந்தது.
இந்தத் திரைப்படம் டிச. 5 ஆம் தேதி திரைக்கு வரும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சென்ற வாரத்தில் பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், லாக் டவுன் திரைப்படம் வரும் டிச. 12 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஆர் ஜீவா இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு என்ஆர் ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். இதில், நடிகர்கள் சார்லி, நிரோஷா, மஹானா சஞ்சீவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.