பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி - ப்ரஜின் இடையேயான நட்பு குறித்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ப்ரஜின் வெளியேறிய பிறகு மேடையில் நின்று சார் என்று விஜய் சேதுபதியை மரியாதையுடன் அழைத்து வந்தார்.
இருந்தபோதும், பாதியிலேயே ஆட்டத்தில் இருந்து வெளியேறியதால், சோகத்தில் இருந்த ப்ரஜினை உற்சாகப்படுத்தும் வகையில் விஜய் சேதுபதி உரிமையாக 'மச்சி' என்று அழைத்து அவரின் ஆட்டத்தைப் பாராட்டி அனுப்பி வைத்தார்.
ப்ரஜினின் ஆட்டம் கடைசி இரு வாரங்களில் சிறப்பாக இருந்ததாகவும், குறுகிய காலத்திலேயே தன்னுடைய குறைகளை திருத்திக்கொண்டு ஆட்டத்தை புரிந்துகொண்டதாகவும் விஜய் சேதுபதி பாராட்டினார்.
இதனால், சற்று நம்பிக்கை அடைந்த ப்ரஜின், சக போட்டியாளர்களிடமும் தனது மனைவி சான்ட்ராவிடமும் உற்சாகமாகப் பேசிவிட்டு வெளியேறினார்.
ப்ரஜின் வெளியேறியதை ஏற்றுக்கொள்ள முடியாததால், சான்ட்ரா தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் அழுதுகொண்டிருந்தார். அவரை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காகவும் ப்ரஜினுடன் விஜய் சேதுபதி நண்பனாக தொடர்ந்து உரையாடினார்.
விஜய் சேதுபதியை கட்டியணைத்தபடி ப்ரஜின் முத்தமிட்டார். இந்த முத்தம் தனது மனைவிக்கானது என்பதை குறிப்பிடும் வகையில் அதனைச் செய்தார். எனினும், ப்ரஜினுக்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி, இது என் நண்பனுக்கானது எனக் கூறி, போட்டியாளர்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.
ப்ரஜினை எண்ணி பெருமை கொள்வதாகவும், தனியாக இருப்பதற்கு தேவையான சமைத்தல், வீட்டை பராமரித்தல் போன்ற அனைத்து செயல்களையும் பிக் பாஸ் வீட்டில் கற்றுக்கொடுத்து அனுப்புவதால், கவலைப்பட வேண்டாம் என சான்ட்ரவிடம் விஜய் சேதுபதி கேலியாகக் கூறினார்.
விஜய் சேதுபதியும் ப்ரஜினும் ஒன்றாக நடிப்புப் பயணத்தை தொடங்கியவர்கள். சின்ன திரையில் நாயகனாக நடித்த ப்ரஜின் நட்சத்திரமாக உயர்ந்திருந்த காலகட்டத்தில் அவருடன் விஜய் சேதுபதியும் தொடர்களில் நடித்திருந்தார்.
இருவரும் ஒன்றாக திரைப் பயணத்தை தொடங்கிய நிலையில், விஜய் சேதுபதி சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறியுள்ளார். எனினும் இவர்களின் நட்பு காலங்களைக் கடந்தும் மாறாமல் இருப்பதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கணவர் ப்ரஜினுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓடிய சான்ட்ரா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.