செய்திகள்

ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் படத்தின் முதல்பார்வை போஸ்டர்.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் ஹேப்பி ராஜ் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

பல முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ் குமார், அதே சமயம் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான, டார்லிங், சர்வம் தாளமயம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

முன்னதாக, ஜி.வி.பிரகாஷ் தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்த பிளாக்மெயில் திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஹேப்பி ராஜ் என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஹேப்பி ராஜ் படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

காதல் தேசம், ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அப்பாஸ், பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

First look poster of GV Prakash's Happy Raj.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திலீப் சிறை செல்ல முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணமா? என்ன சொன்னார்?

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணியில் படம்! தோற்றம் இதுவா?

இந்த விவாதத்தின் தேவை என்ன? நோக்கம் என்ன? மக்கள் பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே...! - பிரியங்கா

பிக் பாஸ் 9: ப்ரஜின் வெளியேற திவ்யா கணேசன் காரணமா?

கருப்பு, துணிச்சல், அழகு...சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT