நடிகர் ரஜினி படையப்பா படத்தின் 2-ஆம் பாகம் நீலாம்பரி என்ற தலைப்பில் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறினார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் படையப்பா திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மறுவெளியீடு செய்யப்படுகிறது.
நடிகர் ரஜினியின் 50-ஆவது ஆண்டு திரையுலக பயணம், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வரும் டிச.12ஆம் தேதி படையப்பா மறுவெளியீடு செய்யப்படுகிறது.
இந்தப் படத்தில் நீலாம்பரி எனும் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார்.
இந்நிலையில், இது குறித்து ரஜினி பேசும்போது கூறியதாவது:
முதல்பாகத்திலேயே நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தற்போது எல்லாமே 2.0 என எடுக்கிறார்கள். அதேபோல் ஏன் படையப்பா 2 எடுக்கக் கூடாது எனத் தோன்றியது.
நீலாம்பரி என்ற தலைப்பில் படையப்பா 2 படத்தை எடுக்க கதையை திட்டமிட்டு வருகிறோம். எல்லாம் சரியாக அமைந்தால், படம் நிச்சயமாக வரும். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.