நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் 20 ஆண்டுகால திரைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் டெமோக்ரடிக் சங்கா கேக் வெட்டி கொண்டாடியது.
நடிகை ரெஜினாவுக்கு முன்னமே தெரிவிக்காமல் திடீரென இன்ப அதிர்ச்சியாக செய்ததால் அவர் மிகவும் அகம் மகிழ்ந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சென்னையைச் சேர்ந்த நடிகை ரெஜினா கேசண்ட்ரா முதன்முதலாக கண்ட நாள் முதல் எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் 2005-இல் நவ.18ஆம் தேதி வெளியாகியது. அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
தமிழ், தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் ஹிந்தி திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த நவம்பர் 18இல் ரெஜினா இந்த 20 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார்.
டெமோக்ரடிக் சங்காவின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ரெஜினாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அந்த நிறுவனம் கேக் வெட்டி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது.
தற்போது, மூக்குத்தி அம்மன் -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.