முகப்பு
செய்திகள்

தீயவர் குலை நடுங்க படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

தீயவர் குலை நடுங்க படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....

Updated On : 11 டிசம்பர் 2025, 1:24 pm IST
பகிர்:

தீயவர் குலை நடுங்க படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அர்ஜுன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலை நடுங்க படத்தை இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Advertisement

இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். கடந்த நவ. 21 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், தீயவர் குலை நடுங்க திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை(டிச. 12) வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

The OTT release date of the film thiyavar kulai nadunga has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.