நடிகர் ரஜினிகாந்த்தின் திரை வாழ்வைப் பலப்படுத்திய திரைப்படம் அபூர்வ ராகங்கள்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தன் 75-வது வயதைக் கொண்டாடுகிறார். வயதில் 75, சினிமாவில் 50 ஆண்டுகள் என வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.
இந்த பிறந்த நாளுக்கும் பல பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
திரைத்துறையில் இன்று தவிர்க்கவே முடியாத சாதனைக்காரரான நடிகர் ரஜினிகாந்த்துக்கு 10 நிமிட காட்சிகள்தான் விதையாக இருந்ததிருக்கிறது.
ரஜினியின் முதல் திரைப்படமான அபூர்வ ராகங்களில் 10 நிமிடங்களுக்கும் குறைவான காட்சிகளிலேயே நடித்திருப்பார் . ஆனால், கோட் சூட்டுடன் கதவைத் திறந்து வருவதிலிருந்து தன் இறுதிக்காட்சி வரை பெரிய வசனங்கள் இல்லையென்றாலும் தன் உடல்மொழியால் அசத்தியிருப்பார்.
தனக்குக் கிடைத்த பாண்டியன் என்கிற சின்ன கதாபாத்திரத்தில் ஏதோ ஒன்றை வித்தியாசமாகச் செய்தது அவரை யாரென்று தேட வைத்து உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.
இன்று ரஜினியின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யாராவது 10 நிமிடம் நடித்தாலே தமிழ் சினிமாவின் பிரபலம் ஆகிவிடுவார் என்கிற நிலையை இந்த 50 ஆண்டுகளில் ரஜினி உருவாக்கி வைத்திருப்பது சாதாரணமானதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.