2014 முதல் 2022 வரையிலான திரைப்படங்கள் மற்றும் சின்ன திரைக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
2016 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திணரப்பட விருதுகள், 2014 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்ன திரை விருதுகள், 2015 - 2016 ஆம் கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவை பிப்ரவரி 13 ஆம் தேதியில் சென்னை கலைவாணர் அரங்கில் வழங்கப்படவுள்ளது.
திரைப்பட விருதுகள்
2016
சிறந்த நடிகர் - விஜய்சேதுபதி (புரியாத புதிர்)
சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (பாம்பு சட்டை)
சிறந்த திரைப்படம் - மாநகரம்
2017
சிறந்த நடிகர் - கார்த்தி (தீரன் அதிகாரம் ஒன்று)
சிறந்த நடிகை - நயன்தாரா (அறம்)
சிறந்த திரைப்படம் - அறம்
2018
சிறந்த நடிகர் - தனுஷ் (வடசென்னை)
சிறந்த நடிகை - ஜோதிகா (செக்கச் சிவந்த வானம்)
சிறந்த திரைப்படம் - பரியேறும் பெருமாள்
2019
சிறந்த நடிகர் - பார்த்திபன் (ஒத்த செருப்பு - சைஸ் 7)
சிறந்த நடிகை - மஞ்சு வாரியர் (அசுரன்)
சிறந்த திரைப்படம் - அசுரன்
2020
சிறந்த நடிகர் - சூர்யா (சூரரைப் போற்று)
சிறந்த நடிகை - அபர்நதி (தேன்)
சிறந்த திரைப்படம் - கூழாங்கல்
2021
சிறந்த நடிகர் - ஆர்யா (சார்பட்டா பரம்பரை)
சிறந்த நடிகை - லிஜோ மோல் ஜோஸ் (ஜெய் பீம்)
சிறந்த திரைப்படம் - ஜெய் பீம்
2022
சிறந்த நடிகர் - விக்ரம் பிரபு (டாணாக்காரன்)
சிறந்த நடிகை - சாய் பல்லவி (கார்கி)
சிறந்த திரைப்படம் - கார்கி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.