மம்மூட்டி - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி, ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.
இந்தப் படம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி திரையரக்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
மேலும் இந்தப் படத்தில் கோகுல் சுரேஷ், சுஸ்மிதா பட், விஜி வெங்கடேஷ், வினீத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
துப்பறியும் காவல்துறை அதிகாரியாக மம்மூட்டி நடித்திருந்தார். அவரே மம்மூட்டி கம்பெனி சார்பில் தயாரித்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக இந்தப்படத்தின் ஓடிடி உரிமம் யாருக்கும் விற்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், 'டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படம் வரும் டிச. 19 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிக் பாஸ் 9: திடீர் ட்விஸ்ட்! இந்த வாரம் இருவர் வெளியேற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.