நடிகை சாய் பல்லவி கர்நாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கைக் கதையில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கில் தன் வணிகத்தை பலமாக வைத்திருப்பவர் தற்போது ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகும் ராமாயணா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக இப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்திற்குப் பின் பான் இந்திய நட்சத்திரமாக வருவதற்கான வாய்ப்புகள் சாய் பல்லவிக்கு நிறையவே இருக்கின்றன.
இந்த நிலையில், மறைந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதில் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, தெலுங்கில் நடிகை சாவித்ரியின் பயோப்பிக்கான மகாநதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
அதேபோல், எம்.எஸ். சுப்புலட்சுமியாக சாய் பல்லவி நடித்தால் சிறப்பாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: மீண்டும் இயக்கி, நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.