நிவின் பாலி 
செய்திகள்

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம் அடுத்தடுத்து வெளியாகிறது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவான பார்மா இணையத் தொடர் ஓடிடியில் வெளியாகிறது.

நடிகர் நிவின் பாலிக்கு வெற்றிப்படம் அமைந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. மலையாளத்தின் நட்சத்திர நடிகராக வந்திருக்க வேண்டியவர், உடல் எடை அதிகரிப்பு மற்றும் மோசமான கதை தேர்வுகளால் கடுமையான சரிவைச் சந்தித்தார்.

தற்போது, உடல் எடையைக் குறைத்து ஓரளவு பழைய தோற்றத்திற்குத் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், நிவின் பாலி நடித்து முடித்த, பார்மா என்கிற இணையத் தொடர் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை (டிச. 19) வெளியாகவுள்ளது. இது மருந்து நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை மையமாக வைத்து திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இவர் நடித்த சர்வம் மயா திரைப்படம் டிச. 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர் தோல்விப்படங்களால் துவண்டிருக்கும் நிவின் பாலிக்கு இந்த அடுத்தடுத்த வெளியீடுகள் வெற்றியைக் கொடுக்க வேண்டுமென அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை கடத்தல் கும்பல் சிக்கியது

கடல்சாா் உயரடுக்கு பாதுகாப்புப் படை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சத்துணவு ஊழியா் வீட்டில் நகை திருடியவா் கைது

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT