நடிகர் கமல்ஹாசன் குறித்து பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நெகிழ்ச்சியாக பகிர்ந்த நீண்ட பதிவு சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
அவரது பதிவில் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் கமல் ஹாசன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டில் மூத்த நடிகராக இருக்கும் அனுபம் கெர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது புதிய படமான ’தன்வி தி கிரேட்’ எனும் படத்தை இயக்கியிருந்தார்.
மணி ரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்து கடைசியாக தக் லைஃப் எனும் படம் வெளியாகியிருந்தது.
அடுத்ததாக கமல் தனது 237-ஆவது படத்தில் அன்பறிவு சகோதரர்கள் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் கமலைச் சந்தித்தது குறித்து புகைப்படத்தைப் பகிர்ந்த அனுபம் கெர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தில்லி விமான நிலையத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களுல் ஒருவரான கமல்ஹாசன் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
பல ஆண்டுகளாக அவரது நடிப்பு, இயக்கத்தின் மீது ரசிகராக இருந்துள்ளேன். நடிகராக அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது மிகவும் அதிகம். அவரது சிறந்த நடிப்புக்கு கணக்கே இல்லை!
விமான நிலைய ஓய்வறையில் நாங்கள் ஒருமணி நேரம் உட்கார்ந்து பேசியிருப்போம். அதில் நாங்கள் வாழ்நாள் முழுவதும் பேசியதுபோல் இருந்தது!
பல தலைப்புகளில் பேசினோம். உலக சினிமா - கே.பாலசந்தர் சார், வாழ்க்கைப் பாடங்கள், பிடித்த புத்தகங்கள், ரஜினி சார் குறித்தும் பேசினோம்! அது மிகவும் ஆடம்பரமான பேச்சாக இருந்தது!
உங்களின் பாராட்டு, அறவணைப்பு, அறிவுரைகளுக்கு நன்றி! அன்பு, மரியாதை மற்றும் பிரார்த்தனை எப்போதும் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.