இயக்குநர்கள் பா. இரஞ்சித், மாரி செல்வராஜ் திரைப்படங்கள் குறித்து நடிகர் சரத் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத் குமார் தற்போது நல்ல கதையசமுள்ள கதைகளில் கவனம் செலுத்தி வருவதுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பழைய ஜாலியான சரத் குமாராகவும் தெரிகிறார். 3 பிஎச்கே, டியூட் திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.
இறுதியாக, நடிகர் சண்முக பாண்டியனுடன் கொம்பு சீவி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், நேர்காணல்களில் பேசிய சரத் குமார், “இயக்குநர்கள் பா. இரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் வெறும் சாதியப் படங்களை எடுப்பதாக கூறுகின்றனர். ஹாலிவுட்டில் என்ன நடக்கிறது? யுதர்கள் தங்களை என்ன செய்தார்கள், அவர்களால் அடைந்த வலிகளை இன்னும் கருப்பின மக்கள் படங்களாக எடுக்கின்றனர். அந்த வலிகளை அவர்களின் நினைவுகளிலிருந்து அழிக்க முடியாது.
அதனால் ஏன் இப்படி தொடர்ந்து படம் எடுக்கிறீர்கள்? என கேலி பண்ணக்கூடாது. அவர்களின் வலியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். படத்தைப் படமாக பாருங்கள். என்னைப் பொறுத்தவரை மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்” எனக் கூறினார். சரத்குமாரின் இக்கருத்துக்கு பலரும் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.