அய்யனார் துணை தொடர் படம் - எக்ஸ்
செய்திகள்

நகரங்களிலும் கிராமங்களிலும் முன்னணியில் இருக்கும் சீரியல்!

கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அய்யனார் துணை.

இணையதளச் செய்திப் பிரிவு

கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அய்யனார் துணை தொடர்.

ஒருசில தொடர்கள் நகர்புற ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும் ஆனால் கிராம ரசிகர்களைக் கவரும் தொடராக வேறுசில தொடர்கள் இருப்பது வழக்கம். ஆனால், இருதரப்பு ரசிகர்களிடமும் அதிக வரவேற்பை பெற்ற தொடராக அய்யனார் துணை மாறியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில், எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார்.

இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் டிஆர்பி புள்ளிகள் அதிகம் பெற்று முன்னணி தொடராக இருந்து வருகிறது. இந்நிலையில் நகர்ப்புறங்களில் இந்தத் தொடர் 9.5 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இதேபோன்று கிராமப்புறங்களில் 8.65 புள்ளிகளைப் பெற்று முதன்மை தொடராக உள்ளது. அதிகபட்சமாக கடந்த புதனிகிழமை எபிஸோட் 10.2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இதனால், நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடராக அய்யனார் துணை மாறியுள்ளது. அய்யனார் துணை குழுவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Ayyanar thunai serial get good rural urban response

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாயல்

மழையும் வெயிலும்...

லெமூரியாவிலிருந்து சென்னை வரை

மருந்துகளைப் புரிந்துகொள்வோம்

கண்ணன் என் கண்ணின் உளானே

SCROLL FOR NEXT