ப்ரஜின் படம் - எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸுக்கு பிறகு... புதிய படத்தில் ஒப்பந்தமான ப்ரஜின்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரஜின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரஜின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குழந்தைகளுடன் வந்திருந்தபோது ப்ரஜின் தெரிவித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததற்கான நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும், எஞ்சியுள்ள வாரங்களுக்கு சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுமாறு மனைவிடம் ப்ரஜின் கேட்டுக்கொண்டார்.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான கேப்டனாக கமருதீன் தேர்வாகியுள்ளார். இந்த வாரத்தில் குடும்ப உறுப்பினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குச் செல்லும் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போட்டியாளர்களின் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து, போட்டியாளர்களைப் பார்வையிடுவார்கள். போட்டியாளர்களின் ஆட்டம் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் சுட்டிக்காட்டுவர்.

அந்தவகையில் முதல் நாளில் சான்ட்ராவின் வீட்டில் இருந்த உறுப்பினர்கள் வருகைப்புரிந்தனர். கணவர் ப்ரஜின் இரு குழந்தைகளுடன் பிக் பாஸ் வீட்டிற்கு வருகைப்புரிந்தார். குழந்தைகளை நீண்ட நாள்கள் கழித்துப் பார்த்தால், உணர்ச்சிப் பெருக்கில் இருந்த சான்ட்ரா அழுது குழந்தைகளை வாரி அணைத்துக்கொண்டார்.

பிறகு தனது புதிய தோற்றம் குறித்து சான்ட்ராவிடம் ப்ரஜின் கூறினார். புதிய படத்தில் தான் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், படத்திற்கான தோற்றத்தில் தற்போது உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன்மூலம் ப்ரஜின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது உறுதியாகியுள்ளது.

தீக்குளிக்கும் பச்சை மரம், பழைய வண்ணாரப்பேட்டை, சா பூ த்ரி ஆகிய படங்களில் ப்ரஜின் நடித்துள்ள நிலையில், தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ரசிகர்கள் பலர் ப்ரஜினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

bigg boss 9 tamil prajean new movie shares with sandra

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கௌதம் கம்பீரை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமா? அமித் மிஸ்ரா பதில்!

2025! கலிஃபோர்னியா காட்டுத் தீ முதல் இலங்கையின் டிட்வா வரை... மனிதனை அச்சுறுத்திய இயற்கை பேரிடர்கள்!

அறிமுக வர்த்தகத்தில் 8% சரிந்த கேஎஸ்ஹெச் இன்டர்நேஷனல்!

Petrol Tank-ல் ரூ.56 லட்சம் ஹவாலா பணம்! கேரளாவிற்கு கடத்திய நபர் கைது!

”பாஜக பெற்றெடுத்த பிள்ளை விஜய்!”: திருமா | செய்திகள்: சில வரிகளில் | 23.12.25

SCROLL FOR NEXT