செய்திகள்

எகோ ஓடிடி தேதி!

எகோ ஓடிடி வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சந்தீப் ப்ரதீப் நடிப்பில் வெளியான எகோ திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிஷ்கிந்தா காண்டம் திரைப்படத்தை இயக்கிய தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் பாகுல் ரமேஷ் கதை, திரைக்கதையில் உருவான திரைப்படம் எகோ.

மலைத்தொடர்களால் சூழப்பட்ட ஒரு பகுதியில் காவல்துறையிடமிருந்து தப்பித்த குரியாச்சன் என்பவரைக் கண்டுபிடிக்கும் கதையில் சில சுவாரஸ்யமான திருப்பங்களும், திரில்லர் அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

கடந்த நவ. 21 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் கேரளம் மற்றும் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்களில் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன.

இதனால், உலகளவில் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. இந்த நிலையில், எகோ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற டிச. 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

eko movie will out on netflix ott

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் மதவெறி ஆட்டத்திற்கு இங்கு இடமில்லை! - முதல்வர் ஸ்டாலின்

இந்தியா அனைவருக்குமானது! - தேவாயலங்கள் மீதான தாக்குதல்களுக்கு முன்னாள் பிரதமர் கண்டனம்!

ஹரியாணாவில் 10 பாம்புகளைக் கொன்று மரத்தில் தொங்கவிட்ட நபரால் பரபரப்பு

உ.பி.யில் முன்னாள் விமானப் படை வீரர் சுட்டுக்கொலை!

2013 டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும்: அண்ணாமலை

SCROLL FOR NEXT