ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவிற்குத் தன் தாயுடன் விஜய் சென்றுள்ளார்.
இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
மேலும், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுவே, இந்தியா சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் 80 ஆயிரம் ரசிகர்களுடன் நடக்குக்கூடிய இசை வெளியீட்டு விழா என்பதால் பெரிய சாதனையையும் செய்யவுள்ளது விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விழாவில் கலந்துகொள்ள நடிகர் விஜய் தன் தாய் ஷோபாவுடன் மலேசியா சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இசை வெளியீட்டு விழாவுடன் விஜய் திரைப்படங்களிலிருந்து முக்கியமான பாடல்களுக்கான இசைக்கச்சேரியும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.