ஜன நாயகன் படத்தை ரீமேக் என்று சொல்பவர்களுக்கு அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் எச். வினோத் பதிலளித்து பேசியுள்ளார்.
இந்தப் படம் வரும் ஜன. 9ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்தப் படம் பாலய்யாவின் தெலுங்கு படத்தின் ரீமேக் என்று வதந்திகள் பரவி வந்தன. நேற்று இரவு மலேசியாவில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எச்.வினோத் பேசியதாவது:
இந்தப் படத்தை ரன்னிங் டைம் அதிகம் என்பவர்களுக்கும் தெலுங்கு ரீமேக் என்பவர்களுக்கும் இல்லை இல்லை பாதி ரீமேக் என்பவர்களும் முன்ன பின்ன இருக்கே நடுவில் புகுந்து அடித்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கும் ஒன்றுதான் சொல்லிக்கொள்வேன். இது தளபதியின் படம்.
எந்தவிதமான கற்பனைகளும் இல்லாமல் திறந்த மனதுடன் வந்து பாருங்கள். சுவாரசியம் குன்றாமல் 100 சதவிகிதம் என்டர்டெயின்மென்ட் தரும்.
கடைசி 15 நிமிஷங்களில் அழுகாட்சி காட்சிகள் இருக்குமெனக் கூறுகிறார்கள். அதெல்லாம் கிடையாது. நம்பிக்கை மட்டுமே இருக்கிறது.
இது தளபதிக்கு என்ட் (இறுதி) கிடையாது, தொடக்கம் மட்டுமே எனக் கூறினார்.
இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாகவும் மமிதா பைஜூ முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பாபி தியோல் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.
நடிகர் விஜய் அரசியல் பயணத்திற்குச் சென்றதால் ஜன நாயகனே தனது கடைசி திரைப்படமெனக் கூறியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.