வெற்றி மாறன் இயக்கத்தில் கமல் ஹாசன்?
கமல் ஹாசன் - வெற்றி மாறன் கூட்டணி குறித்து...
நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கமல் ஹாசன் தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து, அன்பறிவு இயக்கத்தில் தன் 234-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம், முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, கமல் ஹாசன் தன் அரசியல் பணிகளையும் கவனித்து வருகிறார்.
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் கமல் ஹாசனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, நடிகர் சிலம்பரசனை வைத்து வெற்றி மாறன் அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
summary