மடோன் அஸ்வின் இயக்கத்தில் கார்த்தி?
மடோன் அஸ்வின் இயக்கும் புதிய திரைப்படம் குறித்து...
இயக்குநர் அஸ்வின் மடோன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். அப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றார்.
தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் திரைப்படத்தை எடுத்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றதுடன் ரூ. 90 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.
Advertisement
Advertisement
அடுத்ததாக, நடிகர் விக்ரமை வைத்து அஸ்வின் புதிய திரைப்படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட அதே தயாரிப்பு நிறுவனத்தில் இன்னொரு இயக்குநருடன் விக்ரம் இணைந்தார்.
இந்த நிலையில், அஸ்வின் மடோன் நடிகர் கார்த்திக்கு கதை சொன்னதும் அதனை கார்த்திக் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இக்கூட்டணி இணைய வாய்ப்புகள் அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
director aswin modonne might direct new movie with actor karthi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.