நடிகர் சூர்யாவின் திரைப்படத்துடன் மோதும் விஷால்?
நடிகர் விஷாலின் மகுடம் திரைப்படத்தின் வெளியீடு குறித்து...
நடிகர் சூர்யாவின் திரைப்படம் வெளியாகும் நாளில் மகுடம் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தாண்டு தீபாவளி வெளியீட்டுக்கு முன்பே நிறைய திரைப்படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. அதில், இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படம் சுதந்திர நாள் வெளியீடாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
மேலும், நடிகர் கவின் - நயன்தாரா நடிப்பில் உருவான ஹாய் திரைப்படமும் அதே நாளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷால் இயக்கி, நடித்துவரும் திரைப்படமான மகுடம் திரைப்படமும் ஆக. 14 அன்று வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகுடம் திரைப்படத்தை முதலில் இயக்குநர் ரவி அரசு இயக்கி வந்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் படத்திலிருந்து விலக, விஷால் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Reports suggest that Magudam might be released on the same day as actor Suriya's film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.