தனுஷுக்கு ஜோடியாகும் நடிகை ப்ரீத்தி முகுந்தன்?
தனுஷ் படத்தில் நடிகை ப்ரீத்தி முகுந்தன்....
நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷின் 56-வது படம் உருவாகிறது. இதன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மதுரையில் துவங்குகிறது. நாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் திரைப்படத்திற்கு ருக்மணி அதிக படப்பிடிப்பு நாள்கள் ஒதுக்க வேண்டிய சூழலால் இப்படத்திலிருந்து ருக்மணி வசந்த் விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
தற்போது, புதிய தகவலாக இப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை ப்ரீத்தி முகுந்தனைத் தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளதாம். பிளாஸ்ட் வெற்றிக்குப் பின் முக்கியமான நடிகையாகியுள்ள ப்ரீத்தி, நடிகர் தனுஷுடன் இணையவுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Reports indicate that actress Preethi Mukundhan will be starring in actor Dhanush's 56th film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.