தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிரபல மலையாள நடிகர் மோகன் லாலின் தாயார் காலமானார்.
பிரபல மலையாள நடிகர் மோகன் லாலின் தாயார் சாந்தகுமாரி (வயது 90), வயது மூப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதையடுத்து, கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இன்று (டிச. 30) சாந்தகுமாரி காலமானதாக நடிகர் மோகன் லாலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி உள்ளிட்ட மூத்த நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இத்துடன், நடிகர் மோகன் லாலின் தாயார் சாந்தகுமாரியின் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள சட்டப்பேரவை அவைத் தலைவர் ஏ.என். ஷம்சீர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.