மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கடைசி நாளில்...  படம்: யூடியூப் / வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷ்னல்.
செய்திகள்

2,000 தொழில்நுட்ப கலைஞர்கள், 6 மாத உழைப்பு... மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நிறைவு!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு விடியோ குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்தப்படம் 2026 கோடைக் காலத்தில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தினை சுந்தர் சி இயக்கியுள்ளார். இப்பாகத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் நடிகைகள் நயன்தாரா, சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி ஆகியோரும் நடிகர்கள் யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவிலும் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படமாகவும் உருவாகவுள்ளதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், படப்பிடிப்பு நிறைவுப் பெற்றதை விடியோவாக படக்குழு வெளியிட்டு, தேதிக் குறிப்பிடாமல் கோடைக் காலத்தில் வெளியாகுமென அறிவித்துள்ளார்கள்.

சுமார் 2,000 கலைஞர்களுடன் 6 மாதங்களில் அயராது உழைத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளதாக இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

இந்த விடியோவில் குஷ்பு, நயன்தாரா, சினேகா, ஊர்வசி ஆகியோர் இணைந்து கேக் வெட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

The film crew has announced through a video that the shooting for Mookuthi Amman 2 has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரும் போராட்டம்: நள்ளிரவில் பெண் தூய்மைப் பணியாளர்கள் கைது!

2026 பொங்கலை சமூகநீதி கொண்டாட்டமாக்க முதல்வர் அறிவுறுத்தல்!

ஜனநாயகப் போரில் வெற்றிதரும் புத்தாண்டு 2026! மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கடன் பிரச்னையைத் தீர்க்கும் வேணுகோபாலன்!

தடை நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT