நடிகர் அஜித் குமாரின் துப்பாக்கி சுடுதல் விடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த விடியோவில் துப்பாக்கி சுடும் பயிற்சி தாளில் இலக்கை நோக்கி சரியாக சுடப்பட்டுள்ள காட்சிகள் காண்பிக்கப்பட்டு உள்ளன.
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தனக்குப் பிடித்தமான கார் ரேஸிங், பைக் ரேஸிங் என அசத்தி வருகிறார்.
தற்போது, திருப்பூரில் உள்ள வெள்ளகோயில் அருகேயுள்ள கொங்குநாடு ரைஃபிங் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விடியோவைப் பகிர்ந்த அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த விடியோவில், “கொங்குநாடு ரைஃபிங் கிளப்பில் இலக்கை நோக்கி அமைதி, கவனக் குவிப்பு, நிறுத்தமுடியாதவராக அஜித் குமார்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். அன்புடன் அஜித், அவரது குடும்பம் மற்றும் குழு” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.