சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
முக்கியத்துவம் பெறா(Non Prime) நேரத்தில் ஒளிபரப்பப்படும் ஆனந்த ராகம் மற்றும் இலக்கியா தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நீண்ட நாள்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
ஆனந்த ராகம்
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஆனந்த ராகம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகை அனுஷா ஹெக்டே நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நடிகர் அழகப்பனும் நடிக்கின்றனர். இந்தத் தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
பிரீத்தி சஞ்சீவ், ஸ்வேதா செந்தில்குமார், இந்து செளத்ரி, ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வரும் இந்தத் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தத்தொடரின் நிறைவு பகுதி வரும் ஜன. 14 ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியா
அதேபோல, சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இலக்கியா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நந்தன் லோகநாதன், ஷாம்பவி குருமூர்த்தி நடிக்கிறார்கள். இவர்களுடன் சுஷ்மா நாயர், காயத்ரி, ராஜேஸ்வரி, பரத் கல்யாண் உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இலக்கியா தொடரும் 1000 எபிசோடுகளை நெருங்கி ஒளிபரப்பாகிவரும் நிலையில், வரும் ஜன. 14 ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
ஒரே நாளில் இரண்டு பிரதான தொடர்கள் நிறைவடையவுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.