தனுஷ் எழுதிய ‘புள்ள’ பாடல் வெளியீடு!
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புதிய பாடல்...
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ், உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: விடாமுயற்சி சிறப்பு போஸ்டர் வெளியீடு!
இப்படம் பிப். 21 ஆம் தேதி வெளியாகிறது. டீசர் மற்றும் டிரைலர் இன்னும் வெளியாகவில்லை.
ஆனால், படத்தில் இடம்பெற்ற ’கோல்டன் ஸ்பாரோ’, ’காதல் ஃபெயில்’, ‘ஏடி’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
இந்த நிலையில், தனுஷ் எழுதிய ’புள்ள’ பாடலை வெளியிட்டுள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.