காந்தாரி பட அனுபவம் பகிர்ந்த டாப்ஸி..!
நடிகை டாப்ஸி நடித்துவரும் காந்தாரி பட அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.
நடிகை டாப்ஸி நடித்துவரும் காந்தாரி பட அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.
37 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.
அனுராக் கஷ்யப் இயக்கத்தில் உருவான ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டன்கி’ திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றன.
Advertisement
Advertisement
நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார் டாப்ஸி. தற்போது 3 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காந்தாரி பட படப்பிடிப்பு புகைப்படங்களைப் பதிவிட்டு, “சூழ்நிலை கடினமாகும்போது, வலிமையானவர்கள் சவாலை எதிர்கொள்ள கடினமாக உழைப்பார்கள். இந்த ஒற்றைவரிதான் காந்தாரி படம் எங்களுக்கு கற்றுக்கொடுத்த அனுபவமாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது.
படத்தின் கடைசி கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளோம். அதனால் சீலிங் கண்ணாடியை உடைக்க தயாரானோம் (நிஜமாகவே உடைத்தோம்). ஏனெனில் நீங்கள் இதுவரை இல்லாத ஒன்றினை பெறவேண்டுமானால் இதுவரை செய்யாத ஒன்றினை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனிகா திலோன் எழுதியுள்ள காந்தாரி படத்தினை தேவாஷிஷ் மகிஜா இயக்கிவருகிறார்.
நெட்பிளிக்ஸில் வெளியான தில்ரூபா படத்தில் டாப்ஸியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.