நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ள ஃபயர் படத்திலிருந்து கவர்ச்சிப் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் சீரியல் நடிகையாக தொடங்கி தமிழில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக மாறியுள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடையே ரச்சிதா மகாலட்சுமிக்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
தமிழில் பிக்பாஸ் சீசன் 6இல் பங்கேற்று 91ஆவது நாளில் வெளியேறினார். இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் கூடுதல் புகழ்பெற்றார்.
சினிமாக்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் கடந்தாண்டு வெளியான ரங்கநாயக படத்தில் நாயகியாக அறிமுகமானார். லவ் யூ அபி என்ற இணையத்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.
தற்போது, பாலாஜி முருகதாஸுடன் இணைந்து ஃபயர் எனும் படத்தில் நடித்துள்ளார். ஜேஎஸ்கே தயாரித்து இயக்கியுள்ளார். டிகே இசையமைத்துள்ளார். பிப்.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
மெது மெதுவாய் என்ற பாடல் கவர்ச்சிப் பாடல் விடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இந்தப் பாடலின் புரோமோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.