செய்திகள்

குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை... புலம்பும் அஜித் ரசிகர்கள்!

விடாமுயற்சியால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்....

DIN

விடாமுயற்சி திரைப்படம் ஏமாற்றத்தை அளித்ததாக அஜித் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இதில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால் சாதாரண கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். கதையாக அவருக்கு நல்ல படமாக அமைந்தாலும் ரசிகர்களிடம் விடாமுயற்சி அதிருப்தியை அளித்துள்ளது.

விசில் அடித்து கொண்டாடக்கூடிய வகையான படத்திலேயே அஜித்தை பார்த்த அவரின் ரசிகர்கள், விடாமுயற்சியில் புல்லரிக்கும் வசனங்களும் சண்டைக்காட்சிகளும் இல்லாததால் கடும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாருங்கள் என இயக்குநர் நேர்காணலில் கூறியிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ரசிகர்களுக்கு திருப்தியான படமாக இல்லை என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக, வசூலிலும் இப்படம் துணிவின் முதல்நாள் வசூலைவிட குறைவாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அஜித் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தையும் இயக்குநரையும் சமூக வலைதளங்களில் விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.

மேலும், குட் பேட் அக்லி படம்தான் அஜித்தின் படமாகவும் ரசிகர்களுக்கான படமாகவும் இருக்கும் என புலம்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT