நடிகர் சூரி பகிர்ந்த விடாமுயற்சி விடியோ வைரலாகி வருகிறது. நகைச்சுவை நடிகராக இருந்து நாயகராக உயர்ந்துள்ளார் சூரி.
நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார்.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
உறவுகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.
கொட்டுக்காளி, ஏழு மலை ஏழு கடல் தாண்டி ஆகிய படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சூரிக்கு பல்வேறு அங்கீகாரம் கிடைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பெயிண்டர்களின் விடியோவை பகிர்ந்து, “சுவர்களில் நிறங்களைப் பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளைப் பதிக்கிறேன்!” எனக் கூறியுள்ளார்.
இந்த விடியோ பின்னணியில் விடாமுயற்சி இசை ஒலிப்பது அஜித் ரசிகர்களிடம் ஆதரவை பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.