செய்திகள்

வா வாத்தியார் என்ன ஆனது?

வா வாத்தியார் வெளியீடு குறித்து...

DIN

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் வெளியீட்டிற்குத் தாமதமாகி வருகிறது.

கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்று வெற்றிப்படமானது. காதல், ஆக்சன் இல்லாமல் இரு ஆண்களின் பழைய நினைவுகளாக உருவான இப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றது.

தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு ‘வா வாத்தியார்’ எனப் பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டியும், வில்லனாக நடிகர் சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். பொங்கல் வெளியீடாக இந்தாண்டு ஜனவரி மாதம் திரைக்கு வரவிருந்தது. பின், பிப்ரவரி வெளியீடாகத் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் வெளியாகவில்லை.

படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதே படத்தின் தாமதத்திற்கான காரணம் கூறப்படுகிறது. இதனால், இப்படம் மார்ச் வெளியீடாகத் திரைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம்

வீடு புகுந்து தங்க நகைகளைப் பறித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஆதாரை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்கலாம்: தோ்தல் ஆணையம்

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம்: விவசாயிகள் புகாா்

மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT