நடிகர் ரஜினிகாந்த் நடிப்பு குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா விமர்சித்துள்ளார்.
இந்தியளவில் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. காத்திரமான கதைகளை நேர்த்தியான பாணியில் திரையாக்கம் செய்து பாராட்டுகளைப் பெற்றவர். ஆனால், அண்மை காலமாக ராம் கோபால் வர்மா சர்ச்சைகளிலேயே உழன்று வருகிறார்.
இதையும் படிக்க: மஞ்சு வாரியரிடமே கேட்க வேண்டியதுதானே? ஆத்திரமடைந்த பார்வதி!
தற்போது, சாரீ என்கிற படத்தின் கதையை எழுதியுள்ள இவர் நேர்காணல் ஒன்றில், “சாதாரண நடிகர்களுக்கும் ஸ்டார்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ரஜினிகாந்த் நல்ல நடிகரா? எனக்குத் தெரியவில்லை. ஸ்லோமோஷன் இல்லையென்றால் அவர் இருந்திருப்பரா என்பதும் தெரியவில்லை. ரஜினியின் ரசிகர்களை அவரைக் கடவுளாகப் பார்க்கின்றனர். அதனால், அவரால் சாதாரண கதைகளில் நடிக்க முடியாது” என விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.