வா வாத்தியார் போஸ்டர்.  
செய்திகள்

வா வாத்தியார் முதல் பாடல் அப்டேட்!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் பட முதல் பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் பட முதல் பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்று வெற்றிப் படமாகியுள்ளது. காதல், ஆக்சன் இல்லாமல் இரு ஆண்களின் பழைய நினைவுகளாக உருவான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். 

இப்படத்திற்கு ‘வா வாத்தியார்’ எனப் பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டியும், வில்லனாக நடிகர் சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமா இதுவரை கண்டிராதது... காந்தாரா பற்றி சந்தீப் வங்கா!

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றைக் காட்டு யானை!

கொலம்பியாவில் இந்திய வாகனங்களை பார்ப்பதில் பெருமை! ராகுல்

மால்வேர் தாக்குதலிலிருந்து தற்காப்பது எப்படி?

SCROLL FOR NEXT