நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு பழைய படங்களின் பெயர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழின் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் தற்போதைய நிலவரப்படி சினிமா வணிகத்தில் விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இதனால், பெரிய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் சிவகார்த்திகேயனையே முதலில் அணுக முயற்சித்து வருகின்றனர்.
இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் பெயர் டீசரை வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு, ‘மதராஸி’ எனப் பெயரிட்டுள்ளனர்.
ஆச்சரியமாக, சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு பழைய படங்களின் பெயர்களே வைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்நீச்சல் (1968-ல் நடிகர் நாகேஷ் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படம்), காக்கிச்சட்டை (1985-ல் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியானது), வேலைக்காரன் (நடிகர் ரஜினி - எஸ். பி. முத்துராமன் கூட்டணியில் 1987-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம்), ஹீரோ (ஹிந்தி - சல்மான் கான் தயாரித்த இப்படம் 2015-ல் வெளியானது), டான் (ஹிந்தி - நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் 1978-ல் திரைக்குவந்த இப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. தமிழில் பில்லா என்கிற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது).
மாவீரன் (நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1981-ல் உருவான படம்), அமரன் (நடிகர்கள் கார்த்திக் மற்றும் பானுபிரியா நடிப்பில் 1991-ல் வெளியான படம்), பராசக்தி (நடிகர் சிவாஜியின் அறிமுக படமான இது தமிழ் சினிமா வரலாற்றில் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. 1952 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு மறைந்த முதல்வர் மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்) மற்றும் மதராஸி (2006-ல் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான படம்) என பெரும்பாலும் பழைய படங்களின் பெயர்களே எஸ்கேவுக்கு கிடைத்து வருகிறது.
இருப்பினும், இவற்றில் ஹீரோ மற்றும் வெளியாகாத படங்களைத் தவிர்த்து பிற அனைத்து படங்களும் ஹிட் அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.