செய்திகள்

இதுவே முதல்முறை... தண்டேலில் சாதித்த நாக சைதன்யா!

தண்டேல் வசூல் குறித்து...

DIN

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் படம் வசூலில் அசத்தி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் பிப்.7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் சந்து மொந்தேத்தி இயக்கிய இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தி வருகிறது.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் சாய் பல்லவியின் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்ததால் இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சினிமாவில் அறிமுகமாகி 15 ஆண்டுகளைக் கடந்த நாக சைதன்யாவுக்கு இதுவே முதல் ரூ. 100 கோடி வசூலித்த திரைப்படமாக அமைந்துள்ளது.

சாய் பல்லவிக்கும் விராட பருவம், லவ் ஸ்டோரி படங்களைத் தொடர்ந்து தண்டேலிலும் வெற்றி கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் வழிந்தோடும் புதை சாக்கடை கழிவுநீா்: மாநகராட்சி ஆணையரிடம் மாா்க்சிஸ்ட் புகாா்

ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்

மழையால் மின்கம்பம் விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி

வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால் மழைநீரில் மூழ்கிய 700 ஏக்கா் நெற்பயிா்கள்

புதுவை பல்கலை.யில் ஜீரோ காா்பன் இலக்கை அடைய வழிகாட்டி அறிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT