பிரபுதேவா உடன் நடிக்கும் பிக் பாஸ் போட்டியாளர்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளரான சத்யா, பிரபுதேவா உடன் வெள்ளித் திரையில் நடிக்கவுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளரான சத்யா, பிரபுதேவா உடன் வெள்ளித் திரையில் நடிக்கவுள்ளார்.
சின்ன திரையில் அண்ணா தொடரில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்த சத்யா, பிரபுதேவா படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக சத்யா பங்கேற்றார். இவர் இதற்கு முன்பு அண்ணா தொடரில் நடித்திருந்தார். பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பதற்காக தொடரில் இருந்து பாதியில் விலகினார்.
Advertisement
Advertisement
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சத்யாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கியுள்ளன.
இதன் ஒருபகுதியாக பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் மைக்கேல் முசாசி படத்தில் சத்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில், ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், 'மாஸ்டர்' மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ராணுவ வீரராக பிரபுதேவா உடன் சத்யா நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையையொட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சத்யாவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | குமாருடன் குமரன் சந்திப்பு... முத்துக்குமரன் குறித்து சிவகுமார் பகிர்ந்த சுவாரசியம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.