முத்துக்குமரனுடன் சிவகுமார் மற்றும் அவரின் மனைவி சுஜா படம் | இன்ஸ்டாகிராம்
செய்திகள்

குமாருடன் குமரன் சந்திப்பு... முத்துக்குமரன் குறித்து சிவகுமார் பகிர்ந்த சுவாரசியம்!

நடிகர் சிவகுமாரை பிக் பாஸ் சீசன் 8 போட்டியின் வெற்றியாளர் முத்துக்குமரன் நேரில் சென்று சந்தித்தார்.

DIN

நடிகர் சிவகுமாரை பிக் பாஸ் சீசன் 8 போட்டியின் வெற்றியாளர் முத்துக்குமரன் நேரில் சென்று சந்தித்தார்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதியை சந்தித்த நிலையில், இன்று சிவக்குமாரை சந்தித்த படங்களை முத்துக்குமரன் பகிர்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பலரைக் கவர்ந்தது. இதுவரை ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

இதனால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. அதற்கேற்ப இம்முறை போட்டியாளர்களாக பங்கேற்ற பெரும்பாலானோர் நடிகர்களாகவே இருந்தனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக செளந்தர்யாவும், வி.ஜே. விஷாலும் வெற்றி பெற்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலரும், போட்டி முடிந்த பிறகு நட்பு வட்டத்தில் தொடருவது அரிதானது. ஆனால், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பலரும் வெளியே வந்த பிறகும் நட்பைத் தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த சில நாள்களாக வெளிநாட்டுப் பயணங்களில் இருந்த முத்துக்குமரன், சமீபத்தில் விஜய் சேதுபதியை அவரின் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தார்.

முத்துக்குமரன் / சிவகுமார்

அவரைத் தொடர்ந்து நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான சிவகுமாரை முத்துக்குமரன் சந்தித்தார். அவரின் மனைவி சுஜா வருணியும் உடன் இருந்தார். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் முத்துக்குமரன் பகிர்ந்துள்ளார்.

இதில் சுவாரசியமாக குமார் குமரனை சந்திக்கும்போது எனக் குறிப்பிட்டு, இந்தத் தருணம் மிகவும் சிறப்பானது மற்றும் உணர்வுப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முத்துக்குமரன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒப்பனையில் சாரா யஸ்மின்!

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய அம்பத்தி ராயுடு; முதலிடம் யாருக்கு?

ரவுடிகளும், அடிமைகளும்! ரெட்ரோ அல்ல, கிங்டம்! -திரை விமர்சனம்!

முத்தக் காட்சி அவசியமில்லை: ஷேன் நிகம்

SCROLL FOR NEXT