செய்திகள்

குட் பேட் அக்லியில் சிம்ரன்!

நடிகை சிம்ரன் குட் பேட் அக்லியில் நடித்துள்ளதாகத் தகவல்...

DIN

நடிகை சிம்ரன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

இப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ஏப். 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க: சுழல் - 2 டிரைலர்!

தற்போது, குட் பேட் அக்லி திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும், அஜித் நடிக்கவேண்டிய பகுதிகள் முடிந்து அவர் இல்லாத சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குட் பேட் அக்லியில் சிறப்பு தோற்றத்தில் நடிகை சிம்ரன் நடித்துள்ளதாகவும் வாலி படத்தை நினைவுப்படுத்தும் காட்சி ஒன்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக, 2000-ல் வெளியான உன்னைக் கொடு என்னை தருவேன் படத்தில் அஜித் - சிம்ரன் இணைந்து நடித்திருந்தனர். தற்போது, 25 ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் திரையில் தோன்றவுள்ள தகவல் ரசிகர்களிடம் ஆவலை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT