சசிகுமார் - சிம்ரன் 
செய்திகள்

முகை மழை... டூரிஸ்ட் பேமிலி முதல் பாடல் வெளியானது!

நடிகர் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படத்தின் முதல் பாடல் வெளியானது.

DIN

நடிகர் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் முதல் பாடலான ‘முகை மழை’ இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி, கருடன், நந்தன் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன.

இவர் தற்போது அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் இலங்கைத் தமிழர்களாக நடித்துள்ள சசிகுமார்-சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு டீசரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள டூரிஸ்ட் பேமிலி படத்தின் முதல் பாடலான ‘முகை மழை’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் மோகன் ராஜா எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், சைந்தவி பாடியுள்ளனர்.

இந்தப் படம் வருகின்ற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

சிறுநீரக திருட்டு: பிணை கோரிய இடைத்தரகரின் மனு தள்ளுபடி

தொழில் முதலீடு உண்மை நிலை: பாக ஆவண தொகுப்பு வெளியீடு

கோயில் உண்டியல் பணத்தை திருட முயன்ற ஒருவா் கைது

தேசிய தீா்ப்பாயங்கள் ஆணையம்:4 மாதங்களில் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT