யுவன் குரலில் வெளியான ஸ்வீட்ஹார்ட் பட பாடல்!
வெளியானது ஸ்வீட்ஹார்ட் படத்தின் புதிய பாடல்.
ஸ்வீட்ஹார்ட் படத்தின் புதிய பாடல் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம காதல், ஹை ஆன் லவ், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.
பியார் பிரேம காதல் படத்தைத் தவிர மற்ற படங்கள் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தயாரித்த அனைத்து படங்களும் ரசிக்கக்கூடிய வகையிலேயே உருவாகியிருந்தன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இமான் இசையில் ஆண்ட்ரியா குரலில் வெளியான லெவன் பட பாடல்!
நாயகனாக நடிகர் ரியோ ராஜ் நடிக்க அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கியுள்ள திரைப்படம், ‘ஸ்வீட்ஹார்ட்’.
காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கோபிகா ரமேஷ் நாயகியாகவும் ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
முன்னதாக, இப்படத்தின் முதல் பாடலான அவ்ஸம் கிஸா என்ற கானா பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில், ஸ்வீட்ஹார்ட் படத்தின் புதிய பாடலான ’கதவைத் திறந்தாயே’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்பாடலை யுவன்சங்கர் ராஜா, சிந்துரி விஷால் ஆகியோர் பாடியுள்ளனர். வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.