ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி. 
செய்திகள்

கிங்ஸ்டன் டிரைலர் தேதி!

ஜி.வி.பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஜி.வி.பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.

பேச்சிலர் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதியே, கிங்ஸ்டன் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். தனது நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமான கிங்ஸ்டன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார்.

கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவராக நடிக்கிறார்.

யுகபாரதி வரிகளில் ஜிவி பிரகாஷ் குமார், சுப்லக்‌ஷினி இணைந்து பாடிய இந்தப் படத்தின் முதல் பாடலான ’ராசா ராசா’ சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் இரண்டாவது பாடலான ’மண்ட பத்திரம்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை கானா ஃபிரான்சிஸ் எழுதிப் பாடியிருக்கிறார்.

கிங்ஸ்டன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில், இப்படம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் பிப்.27ஆம் தேதி வெளியாகவிருக்கிறதென கூறப்பட்டுள்ளது.

கிங்ஸ்டன் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்மஸ்ரீ விருது பெறும் சிற்பக் கலைஞா் சேலம் ராஜாவுக்கு பாராட்டு விழா!

ஆத்தூரில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

போதை மாத்திரைகள் விற்ற லாரி ஓட்டுநா் கைது

பேரூராட்சி பணியாளா்களை தாக்கியவா் மீது வழக்கு!

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 300 வீரா்கள் பங்கேற்பு! 10 பேருக்கு லேசான காயம்!

SCROLL FOR NEXT