செய்திகள்

மிகப்பெரிய பட்ஜெட்! ஆவேஷம் இயக்குநரின் கதையை இயக்கும் சிதம்பரம்!

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படம் குறித்து...

DIN

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை அடைந்தது.

தற்போது, ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் சிதம்பரம் ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். இதில், நடிகர் அனில் கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், இயக்குநர் சிதம்பரம் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் கதை எழுதியுள்ளார்.

மஞ்ஞுமல் பாய்ஸ் கூட்டணியான ஒளிப்பதிவாளர் ஷைஜூ காலித், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம், கலை இயக்குநர் அஜயன் சல்லிசேரி ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

அறிவிப்பு போஸ்டரை பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம் மலையாளத்தின் மாஸ்டர்பீஸ் என்றும் மிகப்பெரிய கனவு என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிசிஎஸ் சிஇஓ கீர்த்திவாசனின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று?: ப.சிதம்பரம் கேள்வி

உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

என்னென்ன எண்ணங்கள்... மீதா ரகுநாத்!

முதல் டெஸ்ட்: டெவான் கான்வே அரைசதம்; நியூசி. 174 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT