செய்திகள்

வேள்பாரி பணிகளைத் துவங்கும் ஷங்கர்?

வேள்பாரி படம் குறித்து...

DIN

இயக்குநர் ஷங்கர் வேள்பாரி படத்தின் பணிகளைத் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.

அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் ஜன. 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியன் - 3 படம் இந்தாண்டு மத்தியில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான, முதல்கட்ட எழுத்து பணிகளும் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கேம் சேஞ்சர் வெளியீடு முடிந்ததும் ஷங்கர் வேள்பாரி படத்திற்கான நடிகர்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட செலவில் உருவாகும் இப்படத்தை 2026 இறுதியில் திரைக்குக் கொண்டு வரலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நாமக்கல் செயலரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT